முல்லைத்தீவில் நேற்றைய தினம் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 வயதுடைய கள்ளப்பாடு தெற்கினை சேர்ந்த இளைஞரொருவர் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும், 21 வயதுடைய உண்ணாப்பிலவு வடக்கினை சேர்ந்த இளைஞன் 4 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட சுற்றிவளைப்பு
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இருவரும் சிக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஐஸ் போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுவதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.