சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு வாழ்வில் ஒரு முறை வந்தால் இறக்கும் வரை அவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
இதில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் நீரிழிவு நோயாளியாகவோ அல்லது சர்க்கரை நோயாளியாகவோ இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் உணவை உட்கொள்வது அவசியம்.
பீன்ஸ்
நீரிழிவு நோயாளிகளுக்கு பீன்ஸை உணவில் எடுத்துகொள்வது அவசியம். பீன்ஸ் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
பீன்ஸில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக வெளியிடப்படுகின்றன. எனவே அவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயரும் வாய்ப்பு குறைவு.
சர்க்கரையை கட்டுப்படுத்த, தினமும் ஒரு கப் பீன்ஸ் சாப்பிடுங்கள்.
ஆப்பிள்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முக்கியமான ஒன்று ஆப்பிள் தான். ஆப்பிளில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது.
இது சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. ஆப்பிளை ஆரோக்கியமான சிற்றுண்டியாக உட்கொள்ளலாம்.
பாதாம்
பாதாமில் எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளது. இவை மக்னீசியம் நிறைந்த உலர் பழங்களில் ஒன்றாகும். இன்சுலினை மிகவும் திறம்பட பயன்படுத்த பாதாம் உதவும்.
இன்சுலின் குறைபாட்டை உணவில் பாதாம் உட்கொள்வதன் மூலம் சமாளிக்கலாம். மேலும், பாதாம் போன்ற பருப்புகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.
இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
மாதுளை
ஜூஸ் மாதுளை சாறு பருகுவதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதுளம் பழச்சாறு குடிப்பதன் மூலம் 15-20 நிமிடங்களுக்குள் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இவை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சீராக்க மாதுளை சாறு உதவுகிறது என்று பல ஆராய்ச்சி ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்