யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் .
அதேசமயம் இனம் காணப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசியை ஒரு வருடத்துக்கு முன்னர் பெற்றுக் கொண்டவர்கள் என பிரதிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.