மோனோநியூக்ளியோசிஸ் என்பது எப்ஸ்டீன் பார் வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும்.
இந்த நோய் டீனேஜர்கள் அல்லது பெரியவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
இது ஒரு ஆப்தான தொற்று. பொதுவாக உமிழ்நீர் தொடர்பு மூலம் பரவுகிறது. ஒரே தட்டில் உணவைப் பகிர்ந்துகொள்வது, அதே பாத்திரங்களைப் பயன்படுத்துவது மற்றும் மற்றவர்கள் சாப்பிட்டு வைத்த உணவை சாப்பிடுவது என மற்றவர்களின் உடமைகளை பகிர்வதன் மூலம் இந்நோய் பரவுகிறது.
பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமல் மூலம் வெளியேறும் உமிழ்நீர் மூலமாகவும் இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆரம்ப அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மோனோநியூக்ளியோசிஸ் என்றால் என்ன?
மோனோநியூக்ளியோசிஸ் (மோனோ) என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு வைரஸ் தொற்று ஆகும்.
மெடிக்கல் நியூஸ் டுடேயின் கூற்றுப்படி, மோனோவை முத்த நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
ஏனெனில் இது பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.
குழந்தைகளின் உடலில் சுரக்கக்கூடிய ஆன்டிபாடிகள் இந்த நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இந்த தொற்று தொண்டை புண், காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது.
தொற்று உடலை விட்டு வெளியேற 2 முதல் 3 வாரங்கள் ஆகும்.
அறிகுறிகள் எப்படி இருக்கும்
இருமல்
காய்ச்சல்
லேசான காய்ச்சல்
உடல் வலி
தொண்டை வலி
பெரியவர்களுக்கான அறிகுறிகள்
உடல் வெடிப்புகள்
தலைவலி
அதிக காய்ச்சல்
நீரிழப்பு
குளிர்
தொண்டை வலி
உடல் வலி
முக்கிய குறிப்பு
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். முடிந்த வரை யார் சாப்பிட்ட தட்டுகளிலும் உணவை பகிர்வதை குறைத்து கொள்ளுங்கள்.
சுத்தம் சுகாதாரம் தரும் என்பதை எப்போதும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.