குட்டி இலங்கையாக தமிழகம் மாறுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை, அப்போது மது விற்பனையை நம்பி மட்டுமே ஆட்சி செய்யும் மாநிலம் தமிழகம் என்றும் இலவசங்களைக் கொடுத்தால் வளர்ச்சி எப்படி கிடைக்கும் என்பதை திமுக நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழகம் குட்டி இலங்கை ஆக மாறுகிறது என்றும் இலங்கையில் ஒரு குடும்பனத்தினர் வசம் ஆட்சி அதிகாரம் சென்றதால், நெருக்கடி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




















