இலங்கைக்கு 500 மில்லியன் ஜப்பானிய யென் மானியமாக வழங்க ஜப்பான் அரசாங்கம் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர அரசு மருத்துவமனையில் தொற்றாத நோய் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் வழங்கும் உதவித்தொகை செலவிடப்படவுள்ளது.
ஆவணங்கள் பறிமாறல்
இந்த திட்டம் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மானியம் வழங்கப்படும் என ஜப்பான் கூறியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் ,இது தொடர்பான ஆவணங்களை திரு.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் தூதுவர் திரு.மிசுகோஷி ஹிடேயாகி ஆகியோர் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.