4-ஆவது இந்திய ஓபன் தேசிய பாரா தடகளப் போட்டியில் தாய்நாட்டிற்காக ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கத்தை வென்றார்.
பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 5.01 மீட்டர் தூரம் பாய்ந்து அவர் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டி நான்காவது முறையாக இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்று வருகின்றது
இதேவேளை பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 4.71 மீட்டர் தூரம் பாய்ந்து இலங்கையின் மற்றுமொரு வீரங்கனையான குமுது பிரியங்க வௌ்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.