மழை காலத்தில் இயற்கையாகவே காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது.சருமத்தை மென்மையாக மற்றும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க ஓரளவு ஈரப்பதம் உதவும்.
ஆனால் காற்றில் உள்ள நீரின் விகிதம் குறிப்பிட்ட அளவிற்கு கீழ் குறைவாகவோ அல்லது அதற்கு மேல் அதிகமாகவோ இருந்தால் நமது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
கோடைகாலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், மழை காலத்தில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த அதிக ஈரப்பத காலநிலை முகப்பரு, எரிச்சல், வெடிப்பு, தடிப்புகள் மற்றும் வறண்ட சருமம் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
இந்த காலநிலையில் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட வழக்கத்தை விட கூடுதலாக உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தவறாமல் கழுவ வேண்டும்.
அடிக்கடி பயணம் செய்பவர்கள் சருமத்தில் படியும் அழுக்குகளை அகற்ற கூடவே வெட் வைப்ஸ்களை எடுத்து செல்லுங்கள்.
ஜெல் சன்ஸ்கிரீன் அவசியம்: வாரத்தில் பெரும்பாலான நாட்கள் வெயில் இல்லாமல் கிளைமேட் மந்தமாக இருந்து வருகிறது.இந்த கடும் வெயில் இல்லாத ஈரப்பதமிக்க கிளைமேட்டிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
ஏனெனில் சருமத்தை சேதப்படுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாத்து சன்ஸ்கிரீன் ஒரு கேடயமாக செயல்படுகிறது.
இந்த கிளைமேட்டில் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய சரும பாதுகாப்பு தயாரிப்பு டோனர்ஸ் ஆகும். சருமதில் முகப்பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு டோனர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெளியே செல்லும் போது அல்லது உங்கள் வீட்டிற்குள் குளிர்ச்சியான தட்பவெப்பத்தில் இருக்கும் போது என எப்போதும் டோனரை வைத்து கொள்ள வேண்டும்.வெள்ளரி, கிரீன் டீ மற்றும் புதினா அடிப்படையிலான டோனர்களை பயன்படுத்துவது சருமத்தை சுத்தமாக, பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
வாட்டர் பேஸ்டு மாய்ஸ்சரைசர், நீர் சார்ந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்துவது நாள் முழுவதும் சருமத்தை குறிப்பாக சென்சிட்டிவான சருமத்தை பாதுகாக்கிறது.
எந்த காலநிலையில் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியம். வெளியில் செல்லும் போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல வேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஏனென்றால் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது சருமத்தை மேம்படுத்துவதோடு, இயற்கையான பொலிவையும் தரும்
ஃபேஸ் மிஸ்ட்: அதிக ஈரப்பதத்தால் சருமம் வறண்டு போனால் face mist உதவியாக இருக்கும். முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு ஃபேஸ் மிஸ்ட் பயனுள்ளதாக இருக்கும். இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
கிரீன் டீ பேக்கை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி, ஆறவிடவும். பின் அதில் கொஞ்சம் டீ ட்ரீ ஆயிலை சேர்த்து, ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கவும். பின் இதனை பயன்படுத்துங்கள்
ஈரப்பதம் அதிகம் இருக்கும் நாட்களில், சிறந்த தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் ஒன்றாக சீரம்கள் உதவுகின்றன. ஹைலூரோனிக் அமிலம், சாலிசைலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்ட உயர் செயல்திறன் கொண்ட சீரம் பயன்படுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது. ச