அரச நிறுவனங்களில் விசேட சைபர் பாதுகாப்பு கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்கள் இடம்பெறுவதுடன், தகவல்கள் திருடப்படும் சந்தர்ப்பங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை அனுமதி
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்களுக்கு அமைவாக சைபர் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தொழிநுட்ப அமைச்சர் என்ற ரீதியில் இது குறித்த அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்திருந்தார்.
அனைத்து அரச நிறுவனங்களும் இந்த கொள்கைகளை பின்பற்ற வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கணனி அவசர ஆயத்த குழுவால் கொள்கை தயாரிப்பு
தேசிய தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயத்திற்கு அமைவாக இலங்கை கணனி அவசர ஆயத்த குழுவினால் இந்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அநேகமான நிறுவனங்களில் நவீன தகவல் பாதுகாப்பு தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.