கண்கள் துடிப்பது என்பது எல்லோருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது நிகழ்ந்திருக்கும். இது ஒரு பொதுவான நிகழ்வு தான்.ஆனால் இதற்கு பல காரணங்கள் உண்டு என கூறப்படுகின்றது.
கண் துடிப்பில் மூன்று வகைகள் உள்ளன. அவை, மயோகிமியா, பிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் துடிப்பு போன்றவை அறிவியல் ரீதியாக கூறப்படுகின்றது.
இருப்பினும் கண் துடிப்புற்கு பல வாழ்வியல் காரணங்களும் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு கண் துடிப்பை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
கண் துடிப்பை எவ்வாறு சரிசெய்யலாம்?
அதிக அளவிலான மன அழுத்தத்தில் இருந்தால் கண்கள் துடிப்பது அதிகமாகும். எனவே மன அழுத்ததை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் அதிக அளவில் தொலைபேசி, டேப்லெட் அல்லது கணினி பயன்படுத்தினாலும் கண்கள் துடிப்பது நிகழும்.
நீங்கள் நன்றாக ஓய்வெடுக்கவில்லை என்றாலும் கண்கள் துடிப்பு ஏற்படும். உங்கள் உடல் மற்றும் மனம் சோர்வின்றி இருந்தால் தான் கண்களும் சோர்வின்றி இருக்கும்.
நீங்கள் நிறைய காபி குடிப்பவராக இருந்தால், உங்களுக்கு அதிக அளவில் கண் துடிப்பு நிகழும். காபி அதிகம் அருந்துவதால் தூக்கம் குறையும் இதனால் கண்களில் துடிப்பு ஏற்படும்.
அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது மங்கலான பார்வைக்கு மட்டுமல்லாமல் கண் துடிப்புக்கும் வழிவகுக்கும். இதனை தடுக்க ஆல்ஹகால் அளவினை குறைப்பதே நல்லது.
உங்களின் கண்கள் வறண்டிருந்தாலும் கண்கள் துடிப்பு நிகழும்.