PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் மாவடிவேம்பில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேற்றுக்காக காத்திருந்த மாணவனே பலியானதாக தெரியவந்துள்ளது.
பரீட்சை எழுதி முடிந்ததும் பெறுபேறு வரும் வரைக்குமுள்ள காலப்பகுதிக்குள் SMART PHONE. பானையில் மூழ்கியிருந்த இம் மாணவனுக்கு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அறிவுரைகள் கூறியும் கேட்காது தொடர்ந்து அதிலேயே நேரகாலத்தை கழித்து வந்துள்ளார்.
இரவு வேளைகளில் தனது படுக்கையறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாளிடும் இவர் எத்தனை மணிக்கு உறங்குகிறார் என்று கூட தெரியாத நிலையில் காலையில் 10.00 மணிக்குப்பின்பே எழுந்திருப்பார்.
அவரது அறைக்குள் எவரையுமே உள்ளே வர அனுமதிக்கமாட்டார்.
இந்நிலையில் சம்பவ தினமான 21/08 அன்று காலை 10.00 மணியாகியும் எழுந்திருக்காத இவரை, இவரது பெற்றோர் கதவில் தட்டி சத்தமிட்டு அழைத்த போதும் எதுவித பதிலும் வராததால் அவரது சகோதரன் வீட்டின் கூரை மேல் ஏறி ஓடுகளை அகற்றி படுக்கையறையினை அவதானித்த போது, “சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு வீட்டு வளையில் தொங்கி மரணித்திருப்பதை “கண்டுள்ளார்.