திருமணத்திற்கு பின் நடிகை நயன்தாரா மற்றும் விக்கி ஊர் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இருவரும் ஸ்பெயினுக்கு இரண்டாவது ஹனிமூன் புறப்பட்டனர். தற்போது, பார்சிலோனாவில் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஸ்பெயினில் உள்ள வேலன்ஸியாவை தொடர்ந்து அங்கிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஐபிஜா எனும் தீவிற்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.
அங்கிருந்து இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், உலக புகழ் பெற்ற சிக்ஸ் சென்செஸ் என்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் இருவரும் தங்கி உள்ளனர்.
இந்த ஹோட்டலில் தங்க ஒரு நாள் வாடகை மட்டுமே இந்திய மதிப்பில் ரூ.45 ஆயிரம் ரூபாயாம். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.