மதுபானங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் ஸ்டிக்கர்களை கலால் திணைக்களம் வெளியிடாததால் மதுபான விற்பனை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஸ்டிக்கர்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், தற்போது நிலவும் பரிமாற்ற நெருக்கடி காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த ஸ்டிக்கரில் தயாரிப்பின் கலவை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வரி செலுத்துதல் மற்றும் பொருளின் அளவு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து இந்த ஸ்டிக்கர்களை மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.