மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தாய் பால் புரைக்கேறியதில் சிசு ஒன்று மணரமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பகுதியினைச் சேர்ந்த 38 நாள் சிசு பால் புரைக்கேறிய நிலையில் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி காவத்தமுனை கெல்பேச் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் 38 நாட்களை கொண்ட அனஸ் சம்கி அஹமட் என்ற பச்சிளம் குழந்தை பால் புரைக்கேறியதில் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது.
குழந்தையை காலையில் தூக்கிப் பார்த்த போது குழந்தைக்கு மூச்சு இல்லாத நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சிசுவின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.