புத்தளம் 6ம் கட்டை ஸலாமாபாத் கிராமத்திற்குல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காட்டு யானைகள் உற்புகுந்து தென்னை மரஙகள், வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளது.
இந்த நிலையில் குறித்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்டுவதற்கு முற்பட்டபோது இப்ராஹீம் என்ற இளைஞரை குறித்த காட்டு யானை தாக்கியுள்ளது.
இதன்போது படுகாயங்களுக்குள்ளாகிய நபரை உடனடியாக அங்கிருந்தவர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த யானைகள் கிராமத்தை அண்டிய காட்டுப் பகுதிக்குள் மறைந்து நிற்பதாகவும் குறித்த காட்டு யானையை வனஜீவராசிகள் மற்றும் பொலிஸார் இனைந்து காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.



















