நாட்டில் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறும் எனவும் இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அந்தந்த தோட்டப்பகுதியில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க போவதாகவும் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா சாமிமலை மாக்கலை தோட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜீவன் தொண்டமான்; மக்கள் பாரியளவில் வாக்குகளை அளித்து எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட அரசாங்கத்தில் மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய முடியாத அந்த அரசாங்கத்தில் இருந்து நாங்கள் விலகி விட்டோம். எதிர்காலத்தில் நாடு நல்ல ஒரு முன்னேற்றம் அடையும்.
அதன்போது மக்கள் எதிர்பாரக்கும் அபிவிருத்திகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும் என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.