16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார்.
அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்தவை
அத்துடன், அரசியல்வாதிகள் பெரிய தியாகம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும். அதேபோல பொது சேவை ஊழியர்களும் பணியாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க பணியில் 16 இலட்சம் பேர் உள்ளனர். இந்த 16 இலட்சம் பேரில் 6 இலட்சம் பேர் தங்கள் சேவையை நேர்மையாகச் செய்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொதுப்பணித்துறையை குறை கூறுவது அரச ஊழியர்கள்தான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளும், அரச ஊழியர்களும் உறுதிமொழி எடுத்தால், நேர்மையாக சேவை செய்தால் மக்கள் பிரச்சினைகள் விரைவாக தீரும் எனவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.