இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றிலிருந்து இரு சந்தேகநபர்கள் தப்பியோடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.
போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள்
இந்த சந்தர்ப்பத்தில் தப்பியோடியவர்களை சிறைக்காவலர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து துரத்திய போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மேலும், தப்பி சென்றவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




















