சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சம்பவம் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா கைலாசம் என்ற தமது ராஜ்ஜியத்தில் வாழ்ந்து வருவதாக அறிவித்தார்.
மருத்துவ சிகிச்சை
இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறஅடைக்கலம் தரும்படி ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தத்தில், தமக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிகிச்சைக்கான செலவையும் அனைத்து மருந்துகளுக்கான செலவையும் கைலாசா ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறார்.