நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, அரசியலில் தலையீடுகளை மேற்கொண்டாலோ அல்லது பதவிகளை பெற்றுக் கொண்டாலோ மீண்டும் போராட்டங்கள் உருவாகுமென காலி முகத்திடல் போராட்டக்கார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டாபயவை பதவியிலிருந்து வெளியேறுமாறே தாம் கோரியதாகவும், மாறாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தவில்லையெனவும் கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்காரரான ராஜீவ் காந்த் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோட்டாபயவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருக்கிறார்.
தாம் அரசியல் புலனாய்வு இல்லாதவர் ஆனால், சில நிர்வாக பதவிகளில் திறமையான அதிகாரி என்று கோட்டாபய ராஜபக்ச கூறுகிறார்.
ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வந்தால் அது முட்டாள்தனம் என அவர் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசியலில் ஈடுபட்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் சுதந்திரமாக வாழ்வதையே அவர் செய்ய வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய நேற்றுமுன்தினம் (02-09-2022) நள்ளிரவு நாடு திரும்பியதை அடுத்து மல்லசேகர மாவத்தையில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான இல்லத்தில் தற்போது பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பல முக்கிய பிரமுகர்கள் சென்று அவரை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் அதிபருக்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளதாக அதிபரின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.