பிரான்ஸில் இளம் மனைவியை கணவர் மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் லாட்-எட்-கரோன் மாவட்டத்திற்குட்பட்ட வில்நெப் சூர்லொ (Villeneuve-sur-Lot) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணை அவர் 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சந்தேக நபரான கணவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அதிகாலை 1.50 மணியளவில் இந்த தம்பதி தங்கியிருந்த மாடி வீட்டு தொகுதிக்குள் நுழைந்த தீயணைப்பு பிரிவினர், கட்டில் மீது சடலமாக கிடந்த பெண்ணை அவதானித்துள்ளனர்.
அந்த பெண்ணின் உடலில் 20 காயங்கள் மற்றும் 7 ஆழமாக காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். இந்த கொலை சம்பவத்தையடுத்து கணவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ள நிலையில் படுகாயமடைந்துள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பேச முடியாத நிலைமையில் உள்ளமையினால் அவரிடம் கொலைக்கான காரணத்தை பெற முடியாத நிலை காணப்பட்டது.
எனினும் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவிற்கு திரும்பியவுடன் வாக்குமூலம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட கணவர் 26 வயதுடையவராகும் கணவர் மற்றும் மனைவி ஒரே ஹோட்டலில் பணியாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதென பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.