இன்றைய சூழ்நிலையில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நான் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், நம்முடைய நேரம் காலம் சாதகமாக இருக்க வேண்டும்.
நாம் சம்பாதிக்கும் பணம் கையில் தங்குவதற்கு சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
பணம் கையில் தங்க எளிய வழிமுறைகள்
கண்ணாடி உப்பு ஜாடி எடுத்து கொள்ள வேண்டும். முதலில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியில் ஒன்பது கொட்டை பாக்குகள் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் எதுவாக இருந்தாலும் அதையும் இதனுள் வைத்து விடுங்கள்.
இதில் ஒரு வெள்ளி நாணயம், தங்கம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். இத்துடன் உங்கள் வீட்டில் சிறிது அளவு தங்கம் ஒரு மூக்குத்தியாக இருந்தால் கூட போதும் சேர்த்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு இதை உப்பு ஜாடியின் அடியில் வைத்து விடுங்கள். இதற்கு மேல் நீங்கள் கல் உப்பை கொட்டி உபயோகப்படுத்துங்கள்.
இந்த பரிகார முடிச்சு உங்கள் வீட்டு உப்பு ஜாடியினுள் இருக்கும்போது, அந்த உப்பை நம் அசைவம் சமைக்கும்போதும் உபயோகப்படுத்தலாம் தவறில்லை.
பெண்களுக்கான மாதவிலக்கு இது போன்ற எந்த ஒரு கணக்கும் இந்த உப்பிற்கு இல்லை. உங்கள் உப்பு ஜாடியின் அடியில் இந்த முடிச்சு எப்போதும் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
இப்படி செய்வதன் மூலம், முதலில் பணம் வருவதற்கான வழி பிறக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பணம் வீட்டில் தங்க துவங்கும். அப்படி வரும் பணத்தில் உங்களால் முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள். இதனால் எப்போதும் பண வரவு தடையில்லாமல் நமக்கு கிடைக்கும்.