அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பிஉண்ணுகின்றனர்.
இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவையனைத்தும் மனிதனின் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் என்கின்றனர் நிபுணர்கள்
குறிப்பாக பீட்ரூட்டில் வைட்டமின் பி 6, விட்டமின் சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
எனவே, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களுடன் உங்கள் ஒட்டுமொத்த தேவைகளையும் பூர்த்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது . இதை உணவிலெ சேர்த்து நோய் நொடியில்லாமல் வாழுங்கள்.
அந்த வகையில் பீட்ரூட் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பச்சையாக சாப்பிட்டால் நடக்கும் அதிசயம்
பீட்ரூட்டை உட்கொண்டு வருவது அழற்சியால் உண்டாகும் கீல் வலி போன்ற மூட்டு பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது.
மலச்சிக்கல், அழற்சி குடல் நோய்கள், டைவர்டிக்யூலிடிஸ், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
பீட்ரூட் சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பிய உணர்வு நீண்ட நேரம் நீடிக்கும். அதே மாதிரி இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் குடல் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ் நோயை தடுக்கிறது.
பீட்ரூட்டுகளில் இருக்கும் நைட்ரேட்டுகள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது மற்றும் மூளைக்கு போகும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பீட்ரூட் சாப்பிட்டவுடன் இரத்த அழுத்தம் ஆனது 4-10 mmHg ஆக குறைகிறது.
புற்றுநோயை தடுக்க உதவுகிறது. பீட்ரூட்டில் ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை புற்றுநோயை எதிர்க்கும் திறன் வாய்ந்தது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்கிறது. இது புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.