நடிகை ஆல்யா மானசா இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த நிலையில், தனக்கு வாய்ப்பு கொடுத்த ரிவியை விட்டுவிட்டு வேறு ரிவிக்கு மாறியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகை ஆல்யா
பிரபல ரிவியில், ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரில், செம்பா என்கிற வேலைக்கார பெண் கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா, தற்போது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்து ஓய்வெடுத்து வருகின்றார்.
தன்னுடன் சீரியலில் நடித்த சஞ்சீவைக் காதலித்து, கடந்த 2019-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டதுடன், இவர்களுக்கு அயிலா என்ற பெண்குழந்தையும், கடந்த மார்ச் மாதம் ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
வேறு ரிவிக்கு மாறிய ஆல்யா
பிரசவத்திற்கு பின்பு எந்த சீரியலில் நடிக்கவிருக்கின்றார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஆல்யா, சன் ரிவிக்கு மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.
தனது உடலை ஸ்லிம்மாக கொண்டுவருவதற்கு ஆல்யா, உடற்பயிற்சி மற்றும் டயட் மேற்கொண்டு வருகின்றார்.
ஏற்கனவே விஜய் டிவி மூலம் பிரபலமான சஞ்சீவ் தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நாயகனாக நடித்து வரும் நிலையில், விரைவில் ஆல்யாவும் சன் டிவி தொடரில் தான் நடிக்க உள்ளாராம்.
எனவே விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.