விஜய்யின் ‘தெறி’, கமலின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ, பல சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகனாகவும் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது ஈசன் இயக்கத்தில் ‘ஈடாட்டம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இப்படத்தை ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன் தயாரிக்கிறார். இப்படத்தில் வெண்பா, அணுகிருஷ்ணா, தீக்ஷிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வறுமையில் வாழும் நபர் பணத்தேவைக்காக தவறான முடிவுகளை எடுத்தால் அவர் மட்டும் இன்றி அவரை சார்ந்தவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற கதைக்கருவை மைய்யமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார். கஜபதி வசனம், திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.