நேற்று இரவு தொடக்கம் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக கலஹா / ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை கட்டடம் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளது.
ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலையின் இரண்டு மாடி கட்டடத்தின் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று காலை தரம் 1-5 வரை வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் மூலமாக கண்டி கோட்ட கல்வி பணிப்பாளர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததையடுத்து, பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது