இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பிலிப்பைன்ஸில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸின் கொட்டாபாட்டோ நகரில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை
இலங்கையைச் சேர்ந்த 46 வயதான மொஹமட் ரிப்பார்ட் மொஹமட் சித்திக் என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சித்திக்கின் தலையிலும் நெஞ்சுப் பகுதியிலும் மூன்று துப்பாக்கிச்சூடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சித்திக் உதவி கோரியதாகவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் தீவிர விசாரணை
சீ.சீ.ரீ.வி காணொளிகள் ஊடாகவும், ஏனைய வழிகளின் ஊடாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.இந்த பகுதியில் துப்பாக்கி பயன்பாட்டை தடுப்பது குறித்து எதிர்வரும் 17ம் திகதி பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.