கடந்த 13 முதல் 27 ஆண்டுகளாகச் சிறைச்சாலையில் வாடும் உறவுகளுடன் உறவாடும் உணர்வு மிக்க கண்ணீர்ப் பயணத்தின் “உறவுகளுக்கு கரம்கொடுத்து உயிர்ப்புடன் சிறை மீட்போம்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு நேற்று யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகனப் பயணம் ஆரம்பம்
யாழில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலை வரை உறவுகளுடன் உறவாடும் வாகனப் பயணம் யாழ். இராஜாவின் தோட்டத்தில் அமைந்துள்ள யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணம் யாழ். மாவட்ட காணமால் ஆக்கப்பட்டவர்களின் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.



















