கொகரெல்ல பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்றையதினம் ( 12 ஆம் திகதி) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொகரெல்ல கொபல்லாவ பிரதான வீதியின் குருந்துகொல்ல சந்தியில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன் போது பலத்த காயமடைந்த நபர் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 19 வயதுடைய வேகம – கொகரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இளைஞனின் கவனயீனமே விபத்துக் காரணம் என தெரிவித்துள்ள பொலிசார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளார்கள்



















