நாட்டில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையானது கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொடுத்துள்ளனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கொரோனா மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மேல் மாகாணத்தில் 50 வீதமான பாடசாலைகளில் மாத்திரமே கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
ஏனைய மாகாணங்களில் 60 வீதமான பாடசாலைகளில் மாத்திரமே கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடினமான சூழலை மாணவர்கள் எதிர்நோக்கிய போதிலும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.