ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த அணிக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டி
மேலும், 20 பேர் கொண்ட குறித்த அணியின் தலைவராக தசுன் ஷானக்க பெயரிடப்பட்டுள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள், 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
உலக கிண்ணம் இலங்கைக்கே…!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து தான் பெரும் மகிழ்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
ஐ.சி.சி இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
தசுன் சானகவின் நம்பிக்கை நிச்சயமாக வளர்ச்சியடையும். விளையாட்டு மைதானத்திற்குள் வீரர்கள் தசுன் சானகவின் தலைமைத்துவத்தை நம்புகின்றார்கள். அது மிகவும் சிறந்த விடயம். நான் அவரை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தலைவர் என்ற ரீதியில் கடந்த சில வருடங்கள் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது.
ஆனால் இறுதியில் ஆசிய கிண்ணத்தை வெற்றி கொண்டார். அது மிகவும் விசேடமானது. உலக கிண்ண போட்டியிலும் இலங்கை அணி நிச்சயமாக கிண்ணத்தை வெல்லும்” என அவர் தெரிவித்துள்ளார்.