நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் இப்படம் குறித்து வெளியாகவில்லை. விரைவில் படக்குழுவே தளபதி 67 அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று இயக்குனர் லோகேஷ் ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பொழுது கூறி வருகிறார்.
நடிகர் விஜய்யை பற்றிய பல விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும் கூட, அவர் வாழ்க்கையில் உள்ள இன்னும் பல விஷயங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி விஜய்யை பற்றிய பலருக்கும் தெரியாத Facts குறித்து தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
Facts About Vijay
1. நடிகர் விஜய் ஒரு முறை வெளிநாட்டிற்கு சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கட்டியிருந்த கடற்கரை வீட்டை பார்த்து, அதனுடைய இன்ஸ்பிரேஷனில் தான், தன்னுடைய நீலாங்கரை கடற்கரை வீட்டை வடிவமைத்தாராம்.
2. அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தினுடைய ‘மை நேம் இஸ் பில்லா’ பாடலை தான் நடிகர் விஜய் சில காலம் தன்னுடைய ரிங் டோனாக வைத்திருந்தாராம்.
3. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் நான் சிகப்பு மனிதன். இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய்யும் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது ரஜினியுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சாலிகிராமம் வீட்டில் கதைகள் கேட்பதற்காக விஜய் கட்டியுள்ள ஒரு அறையில் பெரிய Frame போட்டு வைத்துள்ளாராம் விஜய்
4. தளபதி விஜய் நடித்த படங்களிலேயே வசீகரா திரைப்படம் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்த படமாம்.
5. Coca-Cola விளம்பரத்தில் நடித்துவிட்டு, அதே Coca-Colaவை கத்தி படத்தில் எதிர்த்து பேசியுள்ளீர்களே என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் நடிகர் விஜய்யிடம் கேள்வி எழுப்பினார். அதற்க்கு நடிகர் விஜய் செய்த தவறுகளை திருத்தி கொள்கிறேன். நானும் சாதாரண மனிதன் தானே என்று ரிப்ளை கொடுத்திருந்தார்.