பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பணப்பெட்டியை எடுப்பவர்கள் மீண்டும் வீட்டிற்குள் விளையாடலாம் என்ற அறிவிப்பை பிக் பாஸ் வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 4 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இவர்களுடன் பழைய போட்டியாளர்களும் வெளியே இருந்து வீட்டிற்குள் சென்ற நிலையில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் விளையாட்டு சென்று கொண்டிருக்கின்றது.
தற்போது பிக் பாஸ் பணப்பெட்டி டாஸ்க்கை கொண்டு வந்துள்ளது. இதில் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுப்பவர்கள் விளையாட்டை மீண்டும் தொடரலாம் என்று புதிய அறிவிப்பை பிக் பாஸ் கொடுத்துள்ளது.