சீனாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை (15) பிற்பகல் சீன ஜனாதிபதி (Xi Jinping) சீ சின்பிங்கை, மக்கள் மண்டபத்தில் சந்திக்க உள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது