தனுஷ் அலுவலகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக சின்னத்திரை நடிகை ஷிவானி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஷிவானி
பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் சின்னத்திரையில் 15 வயதில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஷிவானி.
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார். கமலின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3வது மனைவியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து நாய் சேகர் படத்திலும், பம்பர் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தற்போது ஷிவானி கைவசம் ஒரு படங்கள் கூட இல்லாத நிலையில் தனது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
தனுஷ் ஏன் அழைத்தார்?
இந்த நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தனுஷ் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தாக கூறினார்.
அதில், “ எனக்கு தனுஷ் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. நான் மறுநாள் வருவதாக கூறி கோலை கட் செய்தேன். அங்கு சென்று பார்த்த போது தனுஷ் சார் என்னுடைய பெயருக்காக என்னை பார்ப்பதற்காக அழைத்திருந்தார் என்பது தெரியவந்தது..” என பகிர்ந்துள்ளார்.
இந்த காணாளி இணையவாசிகள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஷிவானி என்ன நடந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















