தேவதர்ஷினி
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தேவதர்ஷினி. இவர் தமிழில் வெளிவந்த காஞ்சனா படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இப்படம் மட்டுமின்றி மெர்சல், பிகில், எதற்கும் துணிந்தவன், எந்திரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தேவதர்ஷினி நடிகர் சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நியாத்தி எனும் ஒரு மகளும் உள்ளார். இவர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் இடம்பெறும் பள்ளி பருவ காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகியாகும் தேவதர்ஷியின் மகள்
இந்நிலையில், விரைவில் நியாத்தி கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம். அதற்கான கதையை தேவதர்ஷினி தற்போது கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
96 படத்திலேயே இவருடைய நடிப்பை பலரும் ரசித்தார்கள். இதனால், இவர் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கும் படத்தை காண எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.