வாரிசு ரிலீஸ் பற்றி தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
வாரிசு
விஜய்யின் வாரிசு படம் தற்போது விறுவிறுப்பான ஷூட்டிங்கில் இருந்து வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து கசிந்து வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.
ரிலீஸ் அப்டேட்
இந்நிலையில் தற்போது வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
“படத்தின் கடைசி schedule ஷூட்டிங் நாளை தொடங்குகிறது. இரண்டு சண்டை காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருக்கிறது. Gear up for a grand #VarisuPongal 2023” என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
#Varisu last schedule starts tomorrow. Just 2 action sequences and 2 songs left for the wrap.
Gear up for a grand #VarisuPongal 2023 #Varisu #Vaarasudu#Thalapathy @ActorVijay @directorvamshi @SVC_official
— Sri Venkateswara Creations (@SVC_official) September 24, 2022




















