இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் 84 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள்
இந்த புதிய வரி காரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரி மீதான வரி (இரட்டை வரிவிதிப்பு) முறையின் கீழ் இந்த வரி செயல்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதற்கமைய, தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு 15 சதவீத வற் வரி விதிக்கப்படும், மேலும் மொத்தத்தில் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரியும் விதிக்கப்படும்.
இரட்டை வரி
இரட்டை வரி விதிப்பு முறையால், இது பொருட்களின் விலையில் 2.5 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இது வேறு பெயரில் முன்பு இருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரி போன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்பு தொழிலதிபர்கள் செய்தது போல், இந்த மறைமுக வரியும் நுகர்வோர் மீது முழுமையாக சுமத்தப்படுவதால், அதிக சுமையால் அவதிப்படும் மக்கள் மேலும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவர்.