இலங்கையின் பிரபல பேக்கரிகளில் ஒன்றான Sunshine வெதுப்பகத்தால் பொதி செய்யபட்ட உணவுப் பொதியில் உற்பத்தி திகதி, காலவதி திகதி, விலை, தொகுதி இல என்பன அச்சிடப்படாமல் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமைக்கப்பட்டு பொதியில் அடைக்கப்பட்ட உணவுகள் 3 அல்லது 4 நாட்களில் கெட்டுப்போகும் . அதன் பின்னர் மனித பாவனைக்கு அவற்றினை உபயோகிக்க முடியாது.
நாட்டில் உணவு பற்றாக்குறை
நாட்டில் உணவு பற்றாக்குறையால் மக்கள் திண்டாடிவரும் நிலையில் இவ்வாறான பொதி செய்யபட்ட உணவுப் பொதியில் உற்பத்தி திகதி, காலவதி திகதி என்பன குறிப்பிடப்படாமை மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு சமனாகும்.
எனவே இதனை உணர்ந்து சமூக பொறுப்புடன் குறித்த பேக்கரி செயற்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.