இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் மக்கள் டீ பருகுகின்றனர் . டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாக உள்ளது.
டீயுடன் உட்கொள்ள கூடாதவை
சிலருக்கு டீயுடன் முட்டை சாப்பிடுவது பிடிக்கும். இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
ஏனெனில் தேயிலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதத்துடன் கலக்கும் போது, அமிலங்கள் புரோட்டீன் கலவைகளை உருவாக்கி மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் அபாயத்தை அதிகரிக்கும்.
டீயுடன் இனிப்பு பிஸ்கட் சாப்பிடுவதையும் பெரும்பாலானோர் விரும்புவார்கள். தேநீருடன் இனிப்பு பிஸ்கட்களை உட்கொள்வது சர்க்கரையின் அளவை பெரிதும் அதிகரிக்கும்.
உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகனால் உடல் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும். சர்க்கரை தொடர்ந்து கட்டுக்குள் இல்லை என்றால் சிறுநீரகம், கண் போன்ற சில உறுப்புகளும் பாதிக்கும்.
கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை டீயுடன் உட்கொண்டால் அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும்.