சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நாய்களை தமது நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
நீர்வெறுப்பு நோய்
நீர்வெறுப்பு நோய் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாய்களை தத்தெடுத்தல், விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு மிருக நல உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
கனேடிய மக்களையும் நாய்களையும் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டுள்ளதாக கனேடிய மிருக வைத்திய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கனடாவில் தற்போதைக்கு நீர்வெறுப்பு நோய் பதிவாகவில்லை.
100 நாடுகளிலிருந்து நாய்களை கொண்டு வர தடை
உரிய முறையில் தடுப்பூசி ஏற்றினால் நீர்வெறுப்பு நோய் முழுமையாகவே கட்டுப்படுத்தக் கூடியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், உக்ரைன், சீனா உள்ளிட்ட 100 நாடுகளிலிருந்து இவ்வாறு நாய்களை கனடாவிற்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் நீர் வெறுப்பு நோய் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 59000 பேர் உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.