வாட்ஸ் அப்பில் ‘வியூ ஒன்ஸ்’ புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
அந்த வகையில் இனி வாட்ஸ் அப்பில் ‘வியூ ஒன்ஸ்’ (view once) முறையில் வரும் புகைப்படம் மற்றும் காணொளிகளை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில தளங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வியூ ஒன்ஸ்’ வசதி கடந்த ஆண்டு வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘வியூ ஒன்ஸ்’ மூலம் வரும் புகைப்படங்களை பயனர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் என்பதுடன், இனி ‘வியூ ஒன்ஸ்’ புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் புதிய வசதி அறிமுகமாகவுள்ளது.
இதேவேளை, வாட்ஸ்அப் பீட்டா சேனலின் சில ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த அம்சத்தை பயன்படுத்த கூடிய தினத்தை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது