ஈராக்கை சேர்ந்த 30 வயது பெண்ணொருவர் 17 வயது சிறுவனை ஜோர்தானிலிருந்து ஈராக்குக்கு கடத்திச் சென்று தன்னை திருமணம் செய்வதற்கு நிர்ப்பந்தித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யேமனைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவனையே இப்பெண் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேற்படி சிறுவன் தனது குடும்பத்தினருடன் ஜோர்தானில் தங்கியிருந்தான்.
சமூக வலைத்தளம் மூலம் இச்சிறுவனுடன் நட்பாக இருந்த மேற்படி யுவதி பின்னர் அவனை ஈராக்கின் தலைநகர் பாக்தாத்துக்கு கடத்திச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இச்சிறுவனை திருமணம் செய்வதே இப்பெண்ணின் நோக்கமாக இருந்தது எனக் கூறப்படுகிறது.
செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த இச்சிறுவனை திருமணம் செய்தால் அக்குடும்பத்தின் செல்வத்தை அனுப்பிக்கலாம் என இப்பெண் எண்ணியிருந்தார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சிறுவன் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அச்சிறுவனை விடுவிக்கப்பட்டுள்ளான்.
மேற்படி சிறுவன் எவ்வாறு பாக்தாத் நகரை வந்தடைந்தான், எவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தான், இப்பெண் தனியாக செயற்பட்டாரா அல்லது வேறு எவரும் உதவினார்களா என்பது குறித்து ஈராக்கிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர.