இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
அதன்படி தற்போதைய சாரதி அனுமதிப்பத்திர அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
QR குறியீடு
அத்துடன் சிப் (Chip) கொண்ட தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.