மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி – அட்டகிரி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காணியின் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் காணியை உழுதுகொண்டு இருந்தவேளை குறித்த குண்டுகள் இரண்டு பைகளினுள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.