இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளதார நெருக்கடியால் சமையல் எரிவாயுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகளும் அதிகரித்து வந்தன.
இந்நிலையில், தற்போது 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எல்.பி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.5300 ஆக காணப்படுகிறது.
5 கிலோ லாஃப்ஸ் எல்.பி கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.2120 ஆக காணப்படுகிறது.