மூன்று பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
கம்பஹா – மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பிரதான சந்தேநபரான குறித்த நபர் தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதியை சேர்ந்த ஜயகொடகே சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால் (39 வயது) என்ற நபரே சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபரின் புகைப்படமும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591608, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591610, நிலைய பொறுப்பதிகாரி மினுவாங்கொடை – 0718591612 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.