கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 450-500 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் தேவை, ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 50 மெட்ரிக் தொன் மட்டுமே சந்தைக்கு விடப்படுகிறது.
இந்நிலையில் சபுகஸ்கந்தவிற்கு சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் கிடைக்காததால் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் அல்லது ஜெட் ஓயில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.