உடல் ஆரோக்கியத்தை போல சரும ஆரோக்கியத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இது உங்கள் அழகோடு ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டதாக உள்ளது.
உங்கள் சருமம் பிரகாசமாக ஜொலிக்க வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய சில எளிய ஹேக்குகள் உள்ளன.
அவற்றை பற்றி விரிவாக காணலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன்
எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும்.
இது சூரிய ஒளியை அகற்ற உதவுகிறது. இதற்கு புதிய எலுமிச்சை சாறு எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
இறந்த செல்களை அகற்ற, நீங்கள் சிறிது சர்க்கரையைச் சேர்த்து, உங்கள் சருமத்தை மெதுவாக ஸ்க்ரப் செய்யலாம்.
20-30 நிமிடங்கள் உலர வைத்து கழுவவும்.
காபி தூள், கொக்கோ பவுடர் மற்றும் தயிர்
ஒரு பௌலில் காபித் தூள் மற்றும் கொக்கோ பவுடரை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படும், சருமத் துளைகள் இறுக்கமடையும் மற்றும் சருமம் பளிச்சென்று அழகாக ஜொலிக்கும்.