சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை – ஐயா கடைச் சந்திப் பகுதியில் நேற்று(16.10.2022) கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன் ஒருவன் தனிமையில் இருந்த மூதாட்டியை கன்னத்தில் தாக்கி விட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
நகை மற்றும் பணம் கொள்ளை
இதன்போது பத்தரைப் பவுண் நகை மற்றும் ஒரு இலட்சத்து 13,000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகமூடி, கையுறை ஆகியன அணிந்து வந்த கொள்ளையன் ஒருவனே குறித்த திருட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .